ஒருபுறம் போராட்டம், மறுபுறம் திருமணம்
எகிப்தில் அரசுக்கெதிரான போராட்டங்கள் 2 வாரங்களாக தொடர்ந்து வரும் நிலையில் காதலர்கள் இருவர் போராட்டங்களுக்கு மத்தியில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
மனோதத்துவ வைத்தியரான அஹமட் சபான் (29) மற்றும் ஹொலா அப்துல் அமீட்(22) ஆகிய இருவருமே இவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.
எகிப்தில் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்திலேயே இவர்களது திருமண வைபவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இத்தம்பதியினர் தாம் எகிப்தின் விடிவுக்காக போராடி வரும் இச் சந்தர்ப்பத்தில் திருமணம் செய்வதில் பெரு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தமது பெற்றோர் இச்சந்தர்ப்பத்தில் இதனை காண இல்லாத போதும் எகிப்தியர்களும் அரேபியர்களும் இதனை கண்ணுற்றதாகவும் தமக்கு வாழ்த்துச் செய்திகள், ஆசிர்வாதங்கள் கிடைத்ததாகவும் இது தமக்கு திருப்தியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இத்திருமண வைபவத்தின்போது சுமார் 300, 000 பேர் வரை திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment