காதலர் தின கொண்டாட்டம் வேண்டாம்
காதலர் தினத்தை கொண்டாடுவதை தவிர்க்கும் படி முஸ்லிம்களுக்கு மலேசிய அரசு அறிவித்துள்ளது.
காதலர் தினம் திங்கட்கிழமை , 14 ஆம் திகதி உலகின் அநேக கிறிஸ்தவ நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
காதலர் தினம், இஸ்லாமிய மரபுக்கு எதிரானது என்பதால், இந்த கொண்டாட்டங்களை தவிர்க்கும் படி மலேசிய துணை பிரதமர் முய்ஹிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"காதலர் தினம் மேற்கத்திய நாட்டினரால் பின்பற்றப்படுவது. இதை மற்ற மதத்தினர் பின்பற்றுவதற்கும், கொண்டாடுவதற்கும் எந்த தடையும் இல்லை' என்றார்.
மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத்துறை தலைவர் அப்துல் அஜிஸ் குறிப்பிடுகையில்,
"இஸ்லாம் காதலுக்கு எதிரானது அல்ல. ஆனால், அந்த தினத்தின் பெயரில் நடக்கும் கொண்டாட்டங்கள் தான் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே, முஸ்லிம் மாணவர்கள் இந்த கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. மேற்கத்திய கலாசாரத்தில் நல்ல விஷயங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்றவற்றை பின்பற்றுகிறோம்' என்றார்.
மலேசிய எதிர்க்கட்சியான பி.கே.ஆர்., தலைவர் அஸ்மின் அலி குறிப்பிடுகையில்,
முஸ்லிம்களுக்கு எதை கொண்டாட வேண்டும், கொண்டாடக்கூடாது, என்ற வரைமுறை தெரியும்' என்றார்.
Post a Comment