பாடசாலை மாணவர்களை ஆட்டோக்களில் ஏற்றிச்செல்ல தடை
ஆட்டோக்களில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தினமும் அளவுக்கதிகமான மாணவர்களை ஆட்டோக்களில் ஏற்றிச் செல்வதைக் காணமுடிகிறது.இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பிள்ளைகள் இவ்வாறு சிரமத்தை அனுபவிப்பதை அனுமதிக்கமுடியாது.எனவே, ஆட்டோக்களில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதையும் தடைசெய்யவுள்ளோம்.
எனினும் ஆட்டோ சாரதிகள் தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் பிள்ளைகளை ஏற்றிச்செல்வதில் தடைகிடையாது. ஆட்டோக்களை போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தி மாணவர்களை ஏற்றிச் சென்று செயற்படமுடியாது.தேவையானால் மூன்று மாணவர்களை ஏற்றிச் செல்லலாம்.அளவுக்கு அதிகமாக நிரப்பிக்கொண்டு செல்லப்படுமேயானால் அதனை தடுத்து நிறுத்த அதிகாரசபை நடவடிக்கை எடுக்கும்.
தற்பொழுது மேல் மாகாணசபையில் பாடசாலை சேவையில் ஈடுபட்டுள்ள வான்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது. எதிர்காலத்தில் ஏனைய பகுதிகளிலும் இது விஸ்தரிக்கப்படும்.அதிகாரசபையின் அனுமதிப்பத்திரம் இல்லாது வான்கள் பாடசாலை சேவையை நடத்தமுடியாது.
மாணவ,மாணவிகளை பாடசாலைகளுக்கு ஏற்றிச்செல்லும் வான்கள் பயணத்துக்கு உகந்ததாக இருப்பதை உறுதிப்படுத்திய பின்னரே அனுமதி வழங்கப்படும்.
Post a Comment