யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடம் கிளிநொச்சிக்கு மாறுகிறது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை முன்பு போல் கிளிநொச்சியில் இயங்க வைக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடம் 1990 வரை கிளிநொச்சியில் செயற்பட்டு வந்தது. இதன் பின்னர் 1996 இல் தற்காலிகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலகுகள் கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டிருந்த சிலகாலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கிளிநொச்சியில் இயங்கிவந்துள்ளது.
2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கடமையாற்றிய பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளையின் முயற்சியில் சகலபீடங்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சில வாடகைக் கட்டிடங்களிலும் பூரணமாக இயங்கிவந்தன.
தற்போது விவசாயபீடம் இயங்கிய கிளிநொச்சி வளாகத்துக்கு விவசாய பீடத்தை மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கிளிநொச்சியில் விவசாயபீடம் இயங்கிய கட்டிடங்களைப் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இக்கட்டிட வேலைகள் பூர்த்தியானதும் விவசாயபீடம் அங்கு மாற்றப்படவுள்ளது.
விவசாய பீடம் கிளிநொச்சியில் இயங்கத் தொடங்கியதும் புதிய விரிவுரை மண்டபம், விடுதி, நிர்வாகக் கட்டிடம் என்பன நிர்மாணிக்கப்படவுள்ளது. கிளிநொச்சி விவசாயபீடத்துக்கு சேர் பொன்.இராமநாதனின் நம்பிக்கை சொத்திலிருந்து விவசாய பயிர் ஆராய்ச்சிக்கு நூறு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment