பிரிட்டனில் இப்படியும் ஒரு ஆய்வு
"காதல் கடிதம் எழுதுவது ஒரு பழமையான சம்பிரதாயம் என்றும், தற்போது காதலிப்பவர்கள் எஸ்.எம்.எஸ்., அனுப்புவது அல்லது பேஸ்புக்கில் தங்களின் விருப்பத்தை பதிவு செய்வதையே விரும்புகின்றனர்,' என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
"காதல் கடிதம்' எனும் தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பிரிட்டன் முழுவதும் இருந்து மூவாயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்களில், 2 சதவீதம் பேர், காதலை விவரித்து கடிதம் எழுதுவதை விட, "ஐ லவ் யூ' என, ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்புவதையே தாங்கள் விரும்புவதாக கூறியுள்ளனர்.
இது குறித்து ஆய்வுக் குழுத் தலைவர் பேராசிரியர் பார்னெட் கூறியதாவது,
ஆய்வில் பங்கு பெற்ற, 9 சதவீதம் பேர் கடிதம் எழுதுவதையே விரும்புவதாகவும் (50 வயதுக்கு மேலானவர்கள்); 24 சதவீதம் பேர் இ-மெயில் அனுப்பி தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதாகவும்; 14 சதவீதம் பேர் தாங்கள் விரும்பும் நபரின் "பேஸ்புக்' முகவரியில் சென்று தங்கள் காதலை பதிவு செய்வதாகவும் தெரிவித்தனர். மேலும், 21 சதவீதம் பேர் போன் வழியாக, காதல் ரசம் ததும்பும் வார்த்தைகளை பேசியதாகவும்;4 சதவீதம் பேர் ரோஜாப் பூ அனுப்பி தங்கள் அன்பை தெரிவித்ததாகவும் கூறினர்.
ஒரு சிலர் காதல் கடிதம் எழுதியதாக கூறினாலும், அவர்கள் சுய சிந்தனையில் தோன்றியதை எழுதாமல், இன்டர்நெட்டில் பிறர் எழுதியதை அப்படியே நகல் எடுத்ததாக தெரிவித்தனர்.இதன் மூலம், இன்றைய காதலில் தீவிரமும், பெருந்தன்மையும் குறைந்துவிட்டது என தெரிகிறது.
தற்போதைய சூழலில், முழு மூச்சாக காதல் செய்வதை யாரும் விரும்பவில்லை. மாறாக, அனைவரும் உடனடியான உறவு முறைகளையும், அதையடுத்து உடல் ரீதியிலான தொடர்பையும் வேண்டுகின்றனர். தாங்கள் விரும்பும் நபர்களுடன் "ரொமான்ஸ்' செய்ய போதிய நேரம் இல்லை என, இளம் தலைமுறையினர் காரணம் சொன்னாலும், உண்மையில் அது பற்றி குறைவான மதிப்பீட்டையே அவர்கள் கொண்டுள்ளனர்.இவ்வாறு பார்னெட் கூறினார்.
Post a Comment