Header Ads



இலங்கையர் மீது சவுதியருக்கு என்ன ஆத்திரம்..??

சவூதி அரேபிய எஜமானார்களால் உடலில் கம்பிகள் ஏற்றப்பட்டு சித்திரவதைகள் செய்யப்பட்ட இன்னொரு பணிப் பெண் ஒருவர்  நாடு திரும்பி வந்து உள்ளார்.

இவர் குருணாகல் மாவட்டத்தில் பொல்பிட்டிகம என்கிற இடத்தைச் சேர்ந்தவர். கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி பணிப் பெண்ணாக சென்று இருந்தார்.
அங்கு சுமார் ஒரு மாதம் வரை வேலை செய்த அவர் மருத்துவ காரணங்களுக்காக சவூதி அதிகாரிகளால் கடந்த 04 ஆம் திகதி திருப்பி அனுப்பப்பட்டார்.

இவர் இங்கு முதலில் பொல்பிட்டிகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
பின் குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இவர் எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இவரது உடலுக்குள் ஏழு இடங்களில் நுண்ணிய வயர் கம்பிகள் ஏற்றப்பட்டு இருக்கின்றது என எக்ஸ்ரே காட்டியது.
இரு வயர் கம்பிகள் வலது கையிலும், நான்கு வயர் கம்பிகள் இடது காலிலும், ஒரு வயர் கம்பி வலது காலிலும் ஏற்றப்பட்டு இருக்கின்றன என்று எக்ஸ்ரே காட்டியது.

அத்துடன் தலையிலும் சில வயர் கம்பிகள் ஏற்றப்பட்டிருக்கின்றமையை வைத்தியர்கள் கண்டு கொண்டனர். மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் புலனாய்வு விசாரணைகளை நடத்தும் என்று வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்து உள்ளது.

No comments

Powered by Blogger.