Header Ads



யாழ்ப்பாணத்தில் பனம் கிழங்குக்கு அதிக கிராக்கி

யாழ்.குடாநாட்டுச் சந்தைகளில் பனங்கிழக்குக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

சந்தைகளில் விற்பனைக்கு வரும் பனங்கிழங்கை வாங்குவதில் தென்னிலங்கையில் இருந்து வருகை தரும் மக்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த  கால யுத்த நடவடிக்கைகளின் போது பெருமளவு பனைமரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதால் குறைந்தளவிலான பனங்கிழக்கே சந்தைகளில் விற்பனைங்கு வருகிறது.

ஒரு கிழங்கு 5 ரூபா முதல் 7 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
வடமராட்சி,தீவகம் போன்ற பிரதேசங்களிலேயே ஓரளவு பனைவளம் காணப்படுகிறது. இப்பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்படும் பனங்கிழங்கையும் பனை உற்பத்திப்பொருட்களையும் சுற்றுலாப்பயணிகள் வாங்கிச் செல்கின்றனர்.

No comments

Powered by Blogger.