இஸ்லாமியக் கடும்போக்கு நிலைப்பாட்டை புலிகளுக்கெதிராகவும் பயன்படுத்துங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் பிரித்தானியாவைக் களமாகப் பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்படக் கூடாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு விடுலைப் புலிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம், சம்பிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய கடும்போக்கு வாதம் போஷிக்கப்படக் கூடாது என அண்மையில் டேவிட் கமரூன் தெரிவித்திருந்ததாகவும், இந்த நிலைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலும் அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் தொடர்வாக கருத நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ருத்ரகுமாரன், நெடியவன் மற்றும் விநாயகம் போன்ற புலி ஆதரவாளர்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment