யாழ்ப்பாணத்தில் புதிய நாணயத் தாள்கள் அடுத்த மாதம் புழக்கத்துக்கு வரும்
இலங்கையின் 63 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு நாட்டின் அபிவிருத்தியைக் குறிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய நாணயத்தாள்கள் அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் விடப்படும்.
இந்தத் தகவலை இலங்கை வங்கியின் யாழ்.மேற்றரக்கிளையின் பிரதம முகாமையாளர் ஏ.மகாதேவா தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
இலங்கையின் 63ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு புதிய நாணயத் தாள்கள் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளன. குடாநாட்டுக்குத் தேவையான நாணயத் தாள்களை இலங்கை மத்திய வங்கியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவந்து ஏனைய வங்கிகளுக்கு வழங்கப்படும் பணியை யாழ். ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மேற்றரக்கிளையே மேற்கொண்டு வருகிறது. இந்த மாதத்துக்குரிய நாணயத் தாள்கள் சுதந்திர தினத்துக்கு முன்பாக எடுத்து வரப்பட்டுள்ளன.
இதன் காரணமாக புதிய நாணயங்களை உடனடியாகப் புழக்கத்தில் விடமுடியாது. அடுத்த மாதம் அந்தப் புதிய நாணயங்கள் யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் விடப்படும் என்றார்.
Post a Comment