அக்கரைப்பற்றில் முஸ்லிம்களிடையே தேர்தல் மோதல்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் உட்புகுந்த மூவர் மேற்கொண்ட தாக்குதலில் அந்த அலுவலகத்திருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் அருவலகத்திற்கும் சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் செல்வாக்கு பெற்று விளங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
Post a Comment