Header Ads



மகளுக்கு பார்வை கிடைப்பதற்காக தனது சிறுநீரகத்தை விற்க முயலும் தாய்


கண்பார்வையற்ற தனது 3 1/2 வயது மகளுக்கான சத்திரசிகிச்சைக்காக போதியளவு நிதி கிடைக்காமையினால், தனது சிறுநீரகத்தை விற்று நிதி திரட்டி பிள்ளையை காப்பாற்ற ஒருதாய் முன்வந்துள்ளார்.

தேவதாஸ் தாமரைச்செல்வி என்ற இந்தத் தாய் கூறுகையில்;

சுபாஸ் பிரமிளா வயது 3 1/2 என்ற எனது மகளின் கண்பார்வையைப் பெறுவதற்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. இச்சத்திர சிகிச்சைக்குத் தேவையான நிதியினை என்னால் திரட்ட முடியாது போய்விட்டது. இதனால் எனது ஒரு சிறுநீரகத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி மகளுக்கு பார்வை கிடைக்கச் செய்ய முயற்சிக்கின்றேன்.

 எனது கணவன் கூலி வேலை செய்வதனால் இச்சத்திரசிகிச்சைக்கு போதியளவு பணத்தை அவராலும் பெற முடியாதுள்ளதால் அமைச்சரொருவரின் மூலம் ஜனாதிபதியிடம் நிதியுதவி வேண்டி கடிதம் அனுப்பிய போதும் இதுவரை நிதி கிடைக்கவில்லை. இதனாலேயே எனது பிள்ளையின் கண் பார்வைக்காக சிறுநீரகத்தை கொடுக்கத் தயாராகவுள்ளேன்.

 இந்த சத்திரசிகிச்சையை துரிதமாக மேற்கொள்ளுமாறு வைத்தியர்கள் கூறியுள்ளதால் நிதி உதவிகள் செய்ய விரும்புவோர் கொமர்ஷல் வங்கியின், கொட்டாஞ்சேனை கிளையில் 8120040156 என்ற கணக்கிலக்கத்தில் வைப்பிலிடுமாறும், இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு (டி.தாமரைச்செல்வி) 0114919113 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளார்

No comments

Powered by Blogger.