Header Ads



இலங்கையில் இனிமேல் மூன்றரை இலட்சத்துக்கு கார் வாங்கலாம்

இந்தியாவின் டாடா மோட்டார் நிறுவனம் உலகில் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படும் முட்டையின் வடிவமைப்பைக் கொண்ட “நனோ கார்களை” தாய்லாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இவ்வாண்டின் முற்பகுதியில் விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

இப்பொழுது “நனோ கார்கள்” மாதத்திற்கு 8000 முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. மும்பாயில் உள்ள இந்நிறுவனம் இன்று மாதமொன்றுக்கு 6000 முதல் 7 ஆயிரம் கார்களை விற்பனை செய்து வருகிறது.

டாடா மோட்டார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் கால் பீட்டர் போஸ்டல் இந்த கார்களை இலங்கையிலும் மாதாந்த அடிப்படையில் பணம் செலுத்தி வாங்கக்கூடிய வகையில் ஒழுங்குகள் செய்வதாக கூறினார்.
இந்த நிறுவனம் முதலாவது நனோ காரை 2009 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் சந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தது. தற்போது இந்த நனோ கார் புதுடில்லியில் ஒரு இலட்சத்து 37,555 இந்திய ரூபாவிற்கு விற்கப்படுகிறது. அமெரிக்க டொலரில் இது 3 ஆயிரம் டொலர்களாகும்.

இலங்கையில் இந்த நனோ கார்கள் 3 இலசத்தி 36 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். இக்கம்பனி இந்தியாவில் தங்களது பல்வேறு தொழிற்சாலைகளில் 2 இலட்சத்து 50 ஆயிரம் கார்களை ஒரு வருடத்தில் தயாரித்து வருகிறது.

No comments

Powered by Blogger.