சவால்களுக்கு முகம் கொடுப்போம் சுதந்திரதின நிகழ்வில் மஹிந்த
பொருளாதார அபிவிருத்தி தொடர்பான சவால்களுக்கு முகம் கொடுக்க நாம் ஒருபோதும் தயங்கவில்லை. நாங்கள் அச்சவால்களுக்கு துணிந்து முகம் கொடுப்போம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்தில் நடைபெற்ற சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், சுதந்திரம் பெறுவதைவிட அச்சுதந்திரத்தை பாதுகாத்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அச்
சுதந்திரத்தினை பாதுகாத்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் எதிர்கால சமுதாயத்துக்கும் பயனளிக்க கூடியதாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment