லா-நினாவின் தாக்கம் நீடிக்கும் வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை
பூகோள காலநிலை மாற்றங்களினால் இலங்கையில் இப்போதைக்கு முற்றிலும் வரட்சியான காலநிலையை எதிர்பார்க்க முடியாது- குளிர்ந்த காலநிலையே தொடரும் என்று வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்போதுள்ள காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும். வெப்பநிலை குறைவதற்கும் காற்றின் வேகம் அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆயினும் கடந்த மாதம் போன்று வெப்பநிலை மிகவும் தாழ்வாக கீழ் இறங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை.
அதேவேளை, வடக்கு, கிழக்கு வடமத்திய, ஊவா மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
இங்கு சுமார் 100 மி.மீ வரையிலான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் சிறிலங்காவின் வளிமண்டலத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதேவேளை தற்போதைய லா- நினா காலநிலை மாற்றமானது குறைந்தது இரண்டு தொடக்கம் நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என்று உலக வளிமண்டலவியல் அமைப்பு எச்சரித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் வரையில் இந்தக் காலநிலை நிலவும் சாத்தியங்கள் உள்ளதாகவும் அது எச்சரித்துள்ளது.
லா-நினா காலநிலை மாற்றத்தினாலேயே இலங்கையில்குறுகிய காலத்துக்குள் இரண்டு பாரிய வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன.
அதுபோன்று அவுஸ்ரேலியா, பிறேசில், பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளிலும் இதேபோன்ற வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment