Header Ads



கே.பி. அரசியலுக்கு வந்தால் வரவேற்க தயார் - டக்ளஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயற்பாட்டாளராகச் செயற்பட்ட கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள தாங்கள் தயார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தெரண இணையத்தளம் வாராந்தம் நடத்தி வரும் ´சந்திப்பு´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பதே எங்களுடைய சித்தாந்தம். அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தை விட்டு ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த கருணாவை கூட நாங்களே முன்னின்று வரவேற்றோம். எனினும் அவர்களுடைய அரசியல் இருப்பை உறுதி செய்வது மக்கள் கைகளிலேயே உள்ளது." என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

No comments

Powered by Blogger.