காதல் செய்யும் மாணவர்களே தேவை - எஸ்.பி.
நேரத்திற்கு வேலை செய்யும், ஆங்கில வகுப்பு செல்லும், காதல் செய்யும், நூலக நாற்காலிகளை சூடாக்கும் மாணவர்களே தனக்கு வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
80ஆம் ஆண்டு கால கட்டங்களில் பல்கலைக்கழகங்கள் முழுமையாக மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. இந்த முழு காலங்களிலும் நாங்கள் தவறு செய்துள்ளோம்.
மக்கள் விடுதலை முன்னணியின் கீழ் பல்கலைக்கழக மாணவர்களது ஒன்றியம் சென்றதன் பின்னர், மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைக்கு மாறான எந்த கொள்கைக் கொண்டவர்களையும் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அவ்வாறு நுழைந்தால் அந்த மாணவர்களை கொன்றனர்.
அண்மையில் நான் பேராதனை சென்று ஹூ சொல்லி கலவரம் ஏற்பட்டு கலைபீட மாணவர் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்து கொண்டு மாணவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
"இந்த குப்பாடி அமைச்சர் நீண்ட காலம் இருந்தால் எமது நண்பர்கள் நேரத்திற்கு வேலை செய்து, ஆங்கில வகுப்பு சென்று, காதல் செய்து, நூலக நாட்காலிகளை சூடாக்கும் நபர்களாக மாறிவிடுவார்கள்" என்று கூறியிருந்தார்.
உண்மையில் எனக்கு அவ்வாறான மாணவர்தான் தேவை என்றார் உயர்கல்வி அமைச்சர்.
Post a Comment