Header Ads



மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு தட்டுப்பாடா..??

கதிர்காமத்தில் இடம்பெற்ற இலங்கையின் 63 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண,அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை.

இலங்கையின் 63 ஆவது சுதந்திரதினம் நேற்று வெள்ளிக்கிழமை கதிர்காமத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இச்சுதந்திரதினக் கொண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் முற்றாகப் புறக்கணித்திருந்த நிலையில், பிரதமர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இதில் பங்கேற்கவில்லை.

பிரதமர் டி.எம்.ஜயரட்ண,முன்னாள் பிரதமரும் அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மற்றும் முக்கிய அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ,சரத் அமுனுகம,டியூ குணசேகர,ஆறுமுகம் தொண்டமான்,ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரட்ண, எஸ்.பி.திஸாநாயக்க, ரிஷாத் பதியுதீன் ஆகியோர் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதேவேளை, சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்ச்சி நிரலில் பிரதமர் டி.எம்.ஜயரட்ணவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இச்சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எவரும் பங்கேற்கவில்லை

No comments

Powered by Blogger.