எனது சகோதரரை பார்க்கவே அமெரிக்கா சென்றேன்
எனக்கு முன்னர் பதவியிலிருந்த ஜனாதிபதிகள் தனிப்பட்ட விஜயங்கள் பலவற்றை மேற்கொண்டிருந்த போது, எவரும் எதனையும் கூறியிருக்கவில்லை. எனது விஜயங்கள் பற்றி நான் அறிவித்தால் எதிர்ப்புகள் காணப்படுகின்றன. லண்டனில் என்ன நடந்தது. இவை யாவும் (அவர் ஆரோக்கியமாக இல்லை என்ற செய்திகள்) விடுதலைப் புலிகளின் பிரசாரம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற உரையாடல் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அன்றைய தினம் காலை மற்றொரு ஊடக அலுவலகம் எரிக்கப்பட்டிருந்தது. ஆதலால் ஜனவரி மாதமானது இலங்கையில் சுதந்திரமான பேச்சுக்கு கொடூரமான மாதமாகக் காணப்பட்டது. இந்த மாதத்திலேயே அதாவது 2009 ஜனவரியில் பத்திரிகையாசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டிருந்தார்.
ஒரு வருடத்தின் பின்னர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போயிருந்தார். தாக்குதலுக்காக திரும்பவும் அரசாங்கம் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியிடம் கூறினோம்.
"அவ்வாறொன்றுமில்லை' என்று கூறிய ஜனாதிபதி "அரசாங்கம் ஏன் அந்த விடயத்தைச் செய்ய வேண்டும். முழுமையான விசாரணைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்' என்று கூறினார்.
எவரும் ஆதாரங்களைத் தருவதில்லை. நாங்கள் கைது செய்கிறோம். பின்னர் அங்கு மனித உரிமைகள் (விவகாரம்) காணப்படுகிறது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு அண்மையில் ஜனாதிபதி மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் தொடர்பாக உரையாடல் திரும்பியது. அவர் ஆரோக்கியமாக இல்லை என்பதை தொடர்புபடுத்தப்பட்டதான செய்திகள் பற்றியும் உரையாடல் திரும்பியது.
ஜனாதிபதி ராஜபக்ஷ சந்தோஷமாகச் சிரித்தார். "இன்று காலை கூட 6 மணிக்கு நான் ஜிம்மில் இருந்தேன். ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து நான் நன்றாக இல்லையா என்பது பற்றிக் கேட்டார். இது தனிப்பட்ட விஜயமாகும்.
நான் உறவினர் ஒருவரை (ஹஸ்டனில் சகோதரர் டட்லி வசிக்கிறார்) சந்திக்கச் சென்றிருந்தேன். எனக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் பல தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். எவரும் எதனையும் கூறியிருக்கவில்லை. நான் எனது விஜயங்களைப் பற்றி அறிவித்தால் அதன் பின்னர் எதிர்ப்புகள் காணப்படும். லண்டனில் என்ன நடந்தது? இவை யாவும் (அவர் நன்றாக இல்லை என்ற செய்திகள்) விடுதலைப் புலிகளின் பிரசாரம்' என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Post a Comment