Header Ads



பாடசாலைகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பா..?

பாடசாலை மாணவர்களைப் போதைப் பொருள் பயன்பாட்டிலிருந்து தடுக்கும் நோக்குடன் சகல பாடசாலைகளிலும் போதைப் பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்க வேண்டுமென கல்வியமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் பாடசாலையின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பான ஆசிரியர், மாணவர், தலைவர், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதி, பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதி, அதிபர், பிரதி அதிபர் அகியோரை உள்ளடக்கியதாக அமைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வை ஊட்டுவதும் ஏனைய அமைப்புக்களின் துணையுடன் போதைப் பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதும் இந்தக் குழுக்களின் செயற்பாடாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் "போதைக்கு முற்றுப்புள்ளி" என்ற சிந்தனையை பாடசாலைகளில் அமுல் படுத்தும் முகமாகவே இந்தக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது

No comments

Powered by Blogger.