இலங்கை மருத்துவர்கள் சாதனை
கண்டி மத்திய மருத்துவ மனையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் முதற் தடவையாக இருதய நாளங்களை மாற்றி இணைக்கும் சத்திரசிகிச்சையொன்று நோயாளியை மயக்கமுறச் செய்யாது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் இருதய சத்திரசிகிச்சை மருத்துவ நிபுணரான ஜீ.காந்தி தலைமையிலான மருத்துவர்கள் குழுவே இந்தச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.38 வயதான கம்பளை வாசியான மஹிந்தகல்லியத்த என்ற இருதய நோயாளிக்கே வெற்றிகரமாக இச்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.சத்திர சிகிச்சை முடிவுற்றுச் சில நிமிடங்களின் பின்னர் மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய எந்தவொரு நீர்ப்பானத்தையும் அருந்தும் ஆற்றல் நோயாளிக்குக் கிட்டியிருந்ததாகவும் மருத்துவ நிபுணர் ஜீ.காந்தி தெரிவித்தார்.
மேலும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் வலி ஏற்படாதிருக்கும் விசேட ஊசிமருந்து நோயாளியின் உடலில் ஏற்றப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமையே இச்சத்திர சிகிச்சையின் விசேட அம்சமாகும்.
Post a Comment