சுவரொட்டிகளை ஒட்டக்கூட எதிரணிக்கு சுதந்திரமில்லை - சோமவன்ச
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் தொடர்ந்தும் போராட்டத்தை மேற்கொள்வோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு ஒரு வருடு பூர்த்தியாவதை முன்னிட்டு அவரை விடுதலை செய்யுமாறு கோரி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஜனநாயக மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சோமவன்ச மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரøயாற்றுகையில்,
நாங்கள் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுப்பதற்காக போராடுகின்றோம்.குறைந்தது எதிர்க்கட்சிகளுக்கு சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு கூட இன்று சுதந்திரம் இல்லை.
இதேவேளை, இன்றுடன் சரத் பொன்சேகாவை கடத்தி ஒரு வருடமாகின்றது.அவரை கடத்தி சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.இவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகின்றோம்.
Post a Comment