Header Ads



சுதந்திரக் கல்விக்கு தடைவராது - மஹிந்த

இந்த நாட்டு மாணவர்களின் சுதந்திரக் கல்விக்கு ஒருபோதும் தடை ஏற்படுத்தப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கல்வி சுதந்திரமாகக் கிடைக்கக்கூடிய சூழலை ஏற்படுத்துவதோடு, பிள்ளைகளின் கல்விக்குத் தேவையான ஏனைய அனைத்து வசதிகளும் நாட்டில் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

வெல்லவாய மஹிந்த ராஜபக்ஷ் நூதனசாலையில் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிள்ளைகளின் கல்விக்கு செலவிடும் நிதி அவர்களுக்கான மூதலீடு என ஜனாதிபதி கூறியுள்ளார்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கை மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைக்கென அதிகம் நிதி ஒதுக்கப்படுவதாகவும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கே அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.