முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி. பதவிகளை பறிக்கபோவதாக ஐ.தே.க. மிரட்டல்
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்தமையால் அவர்களின் எம்.பி. பதவியை பறிக்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்கா ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.களுக்கு இதுதொடர்பில் கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
அதேவேளை இதுதொடர்பில் கருத்து தொவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி,
ஐ.தே.க. யுடன் முஸ்லிம் காங்கிரஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அவ்வாறான நிலையில் எமது எம்.பி. பதவிகளை ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியால் பறிக்க முடீயாது என்றார்
Post a Comment