அரசாங்கத்துக்குள் துரோகிகள் உள்ளனர்
அரசாங்கத்துக்குள் துரோகிகளும் இருக்கின்றனர் - அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது சஆளும் கூட்டணியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி.
தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கட்சியின் பேச்சாளரும், முன்னாள் அமைச்சருமான பியசிறி விஜேநாயக்க இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
“சிறிலங்காவில் ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பொய் உரைக்காமல் உண்மையான நிலவரங்களை வெளியிட வேண்டும். வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்ட பிரதேசங்கள் உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மரவள்ளி மற்றும் வற்றாளை போன்ற கிழங்கு வகைகளை பயிரிடுமாறு அரசாங்கம் பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும்.
அப்போது தான் ஏற்படப் போகும் ஆபத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்க முடியும். முழு உலகமுமே காலநிலை மாற்றத்தினால் பல்வேறு வழிகளிலும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இந்த அனர்த்தங்களினால் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று ஐ.நா. உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்வு கூறியுள்ளன.
போலியான தரவுகளை வெளியிட்டு தேர்தல் நன்மைக்காக மக்களைக் காட்டிக் கொடுக்க முடியாது. இப்போது அரசாங்கத்துக்குள்ளேயும் பொருளாதார துரோகிகள் உள்ளனர். அவதானமாக இருக்க வேண்டும்.
Post a Comment