கொழும்பில் உடு துணியை காயப்போட தடை
உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற உள்ள ஆர்.பிரேமதாஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் இருப்பவர்கள் துணிகளைக் காயப்போடுவதற்கு கொழும்பு மாநகரசபை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இந்த மைதானத்தில் உலகக் கிண்ண ஆட்டங்கள் 7 நடைபெற உள்ளன. இதனை அடுத்தே மைதானத்தைச் சுற்றி உள்ள வீடுகளைச் சேர்ந்தவர்கள் துவைத்த துணிகளை பல்கனிகளில் காயப் போட்டு அநாகரிகமாக நடந்து கொள்ளக் கூடாது என்று அதிகாரிகள் இந்த வாரம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வெளியே தெரியுமாறு துணிகளைக் காயவைக்கக்கூடாது என்றும் வீதியோரங்களில் குப்பைகளைப் போடக்கூடாது என்றும் அதிகாரிகள் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆர்.பிரேமதாஸ மைதானத்திலேயே அரையிறுதி ஆட்டம் ஒன்றும் நடைபெற உள்ளது. மைதானத்தை உலகக் கிண்ணப் போட்டிக்குத் தயார்ப்படுத்த 8 மில்லியன் ரூபாய்களை அரசு செலவிட்டுள்ளது. போட்டி நடைபெறும் சமயத்தில் நாடு உலகம் முழுவதினதும் கவனத்தைப் பெறும். எனவே மைதானத்தைச் சுற்றி உள்ள இடங்களைச் சுத்தமாக வைத்திருக்கும்படி அப்பகுதி மக்களைக் கேட்டுள்ளோம் என்கின்றனர் அதிகாரிகள்
Post a Comment