கசூரினா கடலில் நீராடுவோர் அதிக தூரத்திற்கு செல்லத்தடை
காரைநகர் கசூரினா கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கும்போது குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் செல்லவேண்டாமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்தவாரங்களில் கடலில் அலை அதிகரித்துள்ளது. ஆழமான பகுதியில் குளிக்கச் சென்றவர்களில் ஓரிருவர் மரணித்துள்ள சம்பவத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்தவெள்ளி,சனி,ஞாயிறு விடுமுறை தினங்களில் பெருமளவு சுற்றுலாப்பயணிகள் கசூரினா சுற்றுலா மையத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கு காரைநகர் பிரதேச சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் அவை போதிய அளவில் இல்லையென இங்கு வருகை தரும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Post a Comment