தமிழீழம் என்ற நாடு அமைய அமெரிக்கா ஆதரவளிக்காதாம்
தமிழீழம் என்றொரு தனிநாடு அமைய அமெரிக்கா ஒருபோதும் ஆதரவளிக்காது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் தெரசிடா ஷாபர் தெரிவித்துள்ளார்.
இலங்கை, நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் தொடர்பில் அமெரிக்காவின் பார்வை குறித்து சர்வதேச செய்திச் சேவை ஒன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பதிலளிக்கும் போது:
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவினால் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அலட்சியம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்வாறான குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கத்தின் நோ்மை குறித்து பாராட்டும் அதேவேளை, அது தொடர்பிலான முன்னேற்றம் குறித்து அதிருப்தியாகவுள்ளது.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில் அரசாங்கம் வெற்றி காணத் தவறும் பட்சத்தில் மீண்டும் உள்வாரியான பிரச்சினைகள் ஏற்படலாம். என்று அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment