Header Ads



வவுனியாவில் வியாபாரிகளின் போராட்டம் இடைநிறுத்தம்

வவுனியா சந்தையின் முன் வியாபாரிகள் நடத்தி வந்த போராட்டத்தை கைவிட்டுள்ளனர். வவுனியா சந்தையினுள் வாகனங்கள் செல்ல தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே வியாபாரிகள் இந்த போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டத்தை கருத்திற் கொண்ட வவுனியா பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை மேயர் ஆகியோர் வியாபாரிகளுடன் கலந்துரையாடி சந்தையினுள் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கினர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

No comments

Powered by Blogger.