விரைவில் எதிர்பாருங்கள்...
1990 இல் யாழ் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புக்குள்ளாகியபோது எமது இருப்பு குறித்து பலராலும் அன்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
எமது யாழ் முஸ்லிம் சமூகம் குறித்த அறிவும், விளக்கமும் ஏனைய சமூகங்களிடம் குறைவாக காணப்படுவதே எமது தாயகம் குறித்து சந்தேகங்கள் மேலோங்க காரணமாக அமைந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களாகிய எமக்கும் தாயகம் உண்டு. வரலாறும் உண்டு என்பதை நிரூபிக்கவும் யாழ் முஸ்லிம்களின் வரலாற்று பண்பாட்டை தொடராக பதிவுசெய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களின் இளவயதினருக்கு இப்பதிவு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கிறோம். பகுதி பகுதியாக வெளியாகவுள்ள இந்த வரலாற்று தொடருக்கு உங்கள் சகலருடைய ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.
Post a Comment