மஹிந்த ஆரோக்கியத்துடன் (படம் இணைப்பு)
ஜனாதிபதி நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று சில ஊடகங்கள்போலியான தகவலை வெளியிட்டதை அடுத்து ஜனாதிபதி அவர்கள் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி நாடெங்கிலும் பரவ ஆரம்பித்தது.
நாடு திரும்பிய பின்னர், ஜனாதிபதி நான் சுகதேகியாக இருக்கிறேன். எனக்கு எந்தவித நோய்ப் பாதிப்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.
ஜனாதிபதி நாளாந்தம் அதிகாலை 4 மணிக்கு அலரி மாளிகையிலுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று சுமார் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்வார். அதற்குப் பின்னரே அவர் தனது நிர்வாகப் பணிகளை ஆரம்பிக்கிறார்.
இருதினங்களுக்கு முன்னர் அதிகாலையில் ஜனாதிபதி உண்மையிலேயே சுகதேகியாக இருக்கிறாரா என்பதை நேரில் கண்டறிவதற்காக, திடீரென்று திவயின சிங்களப் பத்திரிகை ஆசிரியர் காமினி சுமனசேகர அலரிமாளிகைக்குச் சென்றிருந்தார். அப்போது, அவர் ஜனாதிபதி தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்த்தார்.
மறுதினம் அவர் ஜனாதிபதி நல்ல சுகதேகியாக இருந்து உடற்பயிற்சி செய்கிறார் என்ற தலைப்பில், ஜனாதிபதி உடற்பயிற்சி செய்யும் படங்களுடன் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
Post a Comment