வடபகுதியில் துரிதகதியில் ரயில் பாதைகள்
வடபகுதியில் மூன்று தொடருந்துப் பாதைகளைப் புனரமைக்கும் வேலைகள் அடுத்த மாதம் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவின் நிதியுதவியுடன் ஓமந்தை - பளை, மதவாச்சி - மடு, மடு - தலைமன்னார் ஆகிய தொடருந்துப் பாதைகள் புனரமைக்கப்படவுள்ளன.
இந்தப் புனரமைப்புப் பணிகளை இந்திய அரசு நிறுவனமான ‘இர்கோர்‘ மேற்கொள்ளவுள்ளது.
இதற்கென 200 பொறியியலாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் இந்தியாவில் இருந்த அழைத்து வரப்படவுள்ளதாக ‘இர்கோன்‘ நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான பொது முகாமையாளர் குப்தா தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பத்துடன் காலி - மாத்தறை இடையிலான தொடருந்துப் பாதையை ‘இர்கோன்‘ நிறுவனம் புனரமைத்துள்ளது. அதுபோன்ற அல்லது அதைவிட அதிகமான தரத்துடன் வடபகுதிக்கான தொடருந்துப் பாதைகள் புனரமைக்கப்படும். இதன்மூலம் அதிக வேகத்தில் தொடருந்துகளை இயக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment