இலங்கையில் ஊடக சுதந்திரம் அவசியம் - ஐ.நா.
இலங்கையில் ஊடக சுதந்தரம் முக்கியமானது, ஊடகவியலாளர்கள் தாக்குதல் அச்சமின்றித் தமது பணிகளை ஆற்றக் கூடியதாக இருக்க வேண்டும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
‘லங்கா ஈ நியூஸ்‘ இணையத்தளத்தின் பணியகம் நேற்று அதிகாலை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெவ்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘லங்கா ஈ நியூஸ்‘ இணையத்தளத்தின் பணயகம் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மனிதஉரிமை அமைப்புகள்., ஊடகத்துறை அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்கள் ஏற்கனவே கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில் ஐ.நா பொதுச்செயலரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு சிறிலங்கா அரசே பொறுப்பெற்க வேண்டும் என்று ஊடகத்துறை அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சுமத்தி வருகின்றன.
அனைத்துலக அளவில் எழுந்துள்ள இந்த அழுத்தங்கள் இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment