ஹொஸ்னி முபாரக்கின் இறுதி நாட்கள்
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்.
எகிப்தில் அடுத்து என்ன நிகழப் போகிறது என்று கடந்த மூன்று வாரங்களாக நிலவிய பெறுமதிமிக்க கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
எகிப்தை கடந்த 30 வருடங்களாக அமெரிக்க, இஸ்ரேல் ஒத்துழைப்புடனும் மேற்குலகின் ஆசிர்வாதத்துடனும் வழிநடத்திய ஹொஸ்னி முபாரக் அந்நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்.
அரபுலக நாடுகளில் செல்வாக்குப் பெற்றுவரும் இஹ்வானுல் முஸ்லிமின் (முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்) பின்புல ஆதரவில் எகிப்தில் நடத்தப்பட்ட மிகப்பெரும் மக்கள் போராட்டம் முபாரக்கின் தப்பியோட்டத்துடன் தற்போது ஒருவகையில் முடிவுக்கு வந்துள்ளது.
வேலையின்மை, குடும்ப ஆதிக்கம், ஊழல், மேற்குலகுடன் உறவு, ஒடுக்குமுறை என கடந்த 30 வருடங்களாக ஹொஸ்னி முபாரக்கின் அராஜகத்திற்கு அடிமைப்பட்டிருந்த எகிப்திய மக்கள் முபாரக் தப்பியோடியதையடுத்து தற்போது சுதந்திர காற்றை சுவாசிப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
எகிப்தில் இடம்பெற்ற போராட்டம் குறித்து கடந்த வாரங்களில் ஏராளமான செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பிந்திய நிலவரங்களை நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஜனவரி 25 ஆம் திகதி எகிப்திய வரலாற்றில் முக்கியத்துவமிக்க நாள் எனலாம். சர்வதிகாரி ஹொஸ்னி முபாரக்குக்கு எதிராக எகிப்திய மக்கள் அன்றுதான் பெருமளவில் வீதிக்கு வந்தனர். டுனீசிய நாட்டு மக்கள் புரட்சி ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் அனுபவங்கள் எகிப்திய மக்கள் வீதிக்கு வருவதற்கு பெரும் உந்துசக்தியாக விளங்கியது.
எகிப்திய மக்களின் போராட்டத்தை ஆரம்பததில் ஹொஸ்னி முபாரக் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வாறு முன்னரும் சிறிய போராட்டஙகள் எகிப்தில் நடைபெற்றுள்ளன. போராட்டத்திற்கு தலைமையேற்றவர்களை கைதுசெய்து சிறையிலிடுவதன் மூலம் எல்லாவற்றையும் வழிக்கு கொண்டு வந்துவிடலாமென்றுதான் முபாரக் என்னியிருந்தார்.
எனினும் அவரின் சிந்தனைக்கு மாறாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. போராட்டக்காரர்களுக்கு உணவு, நீர், ஆடைகள், மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட வசதிகளை முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமே ஏற்பாடுசெய்து கொடுத்ததுடன், போராட்ட வேளையிலும் ஐவேளை தொழுகையை கடைபிடிககுமாறும் போராட்டக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டும் இருந்துள்ளது.
இதனால் போராட்டமானது எவ்வகையிலும் கட்டுக்குலையாமலும், இறுதி இலக்கு வெற்றியே என்ற மந்திரத்துடனும் நகர்த்திச் செல்லப்பட்டது.
ஏற்கனவே எகிப்திலும், பல முஸ்லிம் நாடுகளிலும் இந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்த நிலையல் முஸ்லிம் சகோதர இயக்கத்தின் பலத்தை முபாரக் தவறாகவே எடைபோட்டிருந்தார்.
அத்துடன் தனது நெருங்கிய சகாவான அமெரிககா தன்னை ஒருபோதும் கைவிடாதென்ற முபாரக்கின் அதீக நம்பிக்கையும் அவர் எகிப்திய மக்களின் போராட்டத்தை பொருட்டாக கொள்ளாமைக்கு காரணமாக அமைந்து.
அவ்வாறுதான் இராணுவம் மீது முபாரக்குக்கு இருந்த பெரு நம்பிக்கையும் போராட்டம் குறித்தும், போராட்டக்காரர்களின் கொள்கைபிடிப்பு பற்றியும் முபாரக் தவறாக முடிவுகள் மேற்கொள்ள வழிவகுத்திருந்து.
ஹொஸ்னி முபாரக்கின் இந்த தவறான முடிவுகளுக்கு உதாரணமாக உதவி ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்தியமை, புதிய அமைச்சரவையை நியமித்தமை, கட்சித் தலைமை பதவியிலிருந்து நீங்கியமை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென அறிவித்தமை மற்றும் தொழிலாளாhகளுக்கு புதிய சம்பளத்திட்டத்தை அறிவித்தமை ஆகியவற்றை உதாரணங்களை நோக்கலாம்.
இருந்தபோதும் இவற்றில் எவற்றுக்காகவும் போராட்டத்தை கைவிட தயாரில்லையென்றும், ஹொஸ்னி முபாரக் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்வதே சிறந்த தீர்மானமென்பதிலும் போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்தனர்.
இந்நிலையில திடீர் திருப்பமாக எகிப்தில் தடை செய்யப்பட்டிருந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துடன் ஹொஸ்னி முபாரக் பேச்சுக்கு உடன்பட்டார். எனினும் அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியை ஏற்படுத்தவே போராட்டம் முக்கிய கட்டத்தை எட்டியது எனலாம்.
வியாழக்கிழமை
ஆம், போராட்டத்தின் அந்த முக்கிய கட்டம்தான் ஹொஸ்னி முபாரக் வியாழக்கிழமை இரவு பதவி விலகுவாரென வெளிவந்த தகவலாகும். முழு உலகமும் முபாரக்கின் அந்த அறிவிப்புக்காக காத்திருந்தது.
போதாக்குறைக்கு அமெரிகக சீ.ஐ.ஏ. பணிப்பாளரும் முபாரக் தனது பதவியிலிருந்து விலகி உதவி ஜனாதிபதி உமர் சுலைமானிடம் பொறுப்பை ஒப்படைப்பாரெனவும் கூறினார்.
தக்ரீர் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றிய ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் ஹாஸான் அல் ரோயினி, முபாரக் நாட்டு மக்களின் கோரிக்கைக்கு கட்டுப்பட்டு ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவிட்டால் ஆட்சியை இராணுவத்தினராகிய தாங்கள் கைப்பற்றப் போவதாக அச்சுறுத்தலும் விடுத்தார்.
இவ்வாறு எதிர்பார்ர்ப்புகளிடையே எகிப்திய அரசாங்க தொலைக்காட்சிமுன் தோன்றிய ஹொஸ்னி முபாரக் தான் எகிப்துக்கும், நாட்டு மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டார். தமது நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை அவர் தனதுரையில் விமர்சித்தார். தனது உயிர் உள்ளவரை எகிப்தை விட்டுச்செல்ல மாட்டேன், எனது உயிர் எகிப்து மண்ணில்தான் புதைக்கப்படும் எனவும் உணர்வு மேலோங்க உரையாற்றினார்.
சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த தனதுரையின் இறுதியில் எகிப்திய ஜனாதிபதி பதவியிலிருந்து தன்னால் விலக முடியாதெனவும், தனது பதவிக்காலம்வரை பதவியில் தொடரப்போவதாகவும் கூறினார்.
ஹொஸ்னி முபாரக்கின் இந்த அறிவிப்பினால் முழு எகிப்துமே சீற்றமடைந்ததுடன் வெள்ளிக்கிழமை மிகப்பெரும் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, ஜனாதிபதி மாளிகையை கைபற்றுவதெனவும் ஆhப்பாட்டக்காரர்கள் சூளுரைத்தனர்.
அமொகக ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸி உள்ளிட்ட மேற்குநாட்டு உலகத் தலைவர்களும் ஹொஸ்னி முபாரக்கின் வியாழக்கிழமை உரையை பலமாக விமர்சித்தனர்.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை எகிப்தில் விடுமுறை என்பதால ஹொஸ்னி முபாரக்குக்கு எதிரான போராட்டத்தில் பல இலட்சம் மக்களை வீதிக்கு இறஙகச் செய்வதில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரிதும் பஙகாற்றியிருந்தன. வெள்ளிக்கிழமை காலை முதலே பெருவாரியான மக்கள் தரீர் சுதந்திர சதுக்கம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூடத்தொடங்கினர்.
எகிப்து நாட்டு மக்களிடையே இது இறுதிப் போராட்டம் மற்றும் முபாரக்கை விரட்டினாலே எகிப்துக்கு விடிவு என்பது போன்ற உணர்வுகள் அதிகரித்திருந்தமையால் அனைத்து எகிப்திய வீடுகளிலிருந்தும் மக்கள் விதிக்கு வந்தனர்.
ஜும்மா தொழுகையின்பின் ஒரு சர்வதிகாரியை நாட்டிலிருந்து ஓடஓட விரட்ட வேண்டுமென்ற வெறியுடன் ஹொஸ்னி முபாரக்கின் மாளிகைநோக்கி பல பாகங்களிலிருந்தும் ஆhப்பாட்டமாக மக்கள் கூட்டம் சென்றது.
தப்பியோட்டம்
இந்நிலையில வேறு வழியின்றி நாட்டு மக்களின் போரட்டத்தினால் தனது மாளிகை சுற்றிவளைக்கப்பட்டு தான் தூக்கிலிடப்படலாமென அஞ்சி நாட்டைவிட்டு ஹொஸ்னி முபாரக் தப்பியோடியுள்ளதாக அல் அரேபியா மற்றும் அல் ஹிரா ஆகிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ஊடகங்களின் தகவலினடிப்படையில் ஹொஸ்னி முபாரக் தற்போது எங்கு தங்கியுள்ளார் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. செங்கடலிலுள்ள சுற்றுலா பூங்காவொன்றில் தங்கியிருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மற்றும் சில ஊடகங்கள் அவர் ஐக்கிய எமிரேஸில் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன.
அதேவேளை சில ஊடகங்கள் ஹொஸ்னி முபாரக் தப்பி யோடவில்லையெனவும் அவர் தனது பதவியை ராஜனாமா செய்துவிட்டு, தனது அதிகாரங்களை இராணுவத்திடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
எகிப்திய அரசாங்க தகைக்காட்சிமுன் தோன்றிய உதவி ஜனாதிபதி ஒமர் சுலைமான் ஹொஸ்னி முபாரக் ராஜனாமா செய்துள்ளதை உறுதிப்படுத்தினார். இதனை பல்வேறு சர்வதேச ஊடகங்களும் நேரடியாக ஒளிபரப்புச்செய்தன.
இந்த அறிவிப்பையடுத்து வீதிகளில் திரண்டிருந்த எகிப்திய மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். துமது போராட்டம் வெற்றி பெற்றுள்ளதெனவும் எகிப்து சுதந்திரம் கண்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அடுத்தது என்ன?
எகிப்திய நாட்டு மக்கள் ஒரு சர்வதிகாரிக்கு எதிராக மேற்கொண்ட 18 நாள் போராட்டம் வெற்றிபெற்ற நிலையில அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது.
எகிப்தில் நீதியான தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் வெற்றியீட்டுமென சுதந்திர ஊடகங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆட்சியை கைப்பற்றுவது சாத்தியமாவென்ற கேள்வி இங்கு எழுகிறது.
எகிப்து நாட்டின் ஆட்சி அதிகாரம் ஒரு இஸ்லாமிய சார்பு அமைப்பிடம் செல்வதை அமொககாவோ அல்லது இஸ்ரேலினாலோ எவ்வகையிலும் ஜீரணித்துக்கொள்ள முடியாது. எனவே எகிப்தின் ஆட்சி அதிகாரம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிடம் செல்வதை ஒருபோதுமே இந்நாடுகள் ஏற்கப்போவதில்லை.
அவ்வாறுதான் சிலசமயம் முஸ்லிம் சகோரத்துவ இயக்கம் எகிப்தில் ஆடசிபீடமேறினாலும் பலஸ்தீன காஸா பகுதியில் ஹமாஸ் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்களையே எகிப்தில் முஸ்லிம் சகோரத்துவ இயக்கமும் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
மேற்குலகு ஊடகங்களால் புகழப்படும் மொஹமட் அல் பராடி மேற்குலகில் செல்வாக்கு பெற்று விளங்குகிறபோதும் என்னவோ அவரது செல்வாக்கு எகிப்தில் குறிப்பிடும்படியாகவில்லை. ஏனவே தேர்தலொன்றில் அவர் ஆட்சிபீடமேறுவதும் சந்தேகமே.
இவ்வாறானதொரு நிலையில எகிப்திர் இராணுவ ஆட்சி நீடிப்பதறகான சாத்தியங்களையும் நாம் நிராகரிக்கமுடியாது. ஏனெனில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிடம் ஆட்சியதிகாரம் செல்வதைவிட இராணுவத்திடம் அதிகாரமிருப்பதையே அமொக்கா மற்றும் இஸ்ரேல் விரும்பும். இதனமூலமே தமது நலன்கள் எகிப்தில் பாதுகாக்கப்படுமென்று அந்நாடுகள் நம்புவதேக காரணமாகும்.
யார் இந்த ஒமர் சுலைமான்?
அதேவேளை ஹொஸ்னி முபாரக்கினால் உதவி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஒமர் சுலைமான் எகிப்தின் அதிகாரம் பொருந்திய புலனாய்வு பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். ஓருதடவை ஹொஸ்னி முபாரக்கை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியிலிருந்தும் அவரை காப்பாற்றியதும் இந்த ஒமர் சுலைமான்தான்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் எகிப்தில் ஆhப்பாட்டம் ஆரம்பமானவுடன் உதவி ஜனாதிபதியாக ஒமர் சுலைமான பதவி உயர்த்தப்பட்டார்.
மேலும் விக்கிலீக்ஸ் அண்மையில் வுhந னுயடைல வுநடநபசயிh க்கு முக்கிய தகவலை வழங்கியுள்ளது. அந்த தகவலின்படி, 2008 இல் இஸ்ரேல் - அமொக்க அதிகாரிகள் சந்திததுக்கொண்ட போது உமர் சுலைமானை எகிப்தின் அடுத்த ஜனாதிபதியாக்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
எகிப்தின் ஜனாதிபதியாக உமர் சுலைமான் ஜனாதிபதியாக வேண்டிய அவசியத்தை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகர் டேவிட் ஹாச்ஹம் பலதடவை அமொக்க அதிகாரிகளுக்கு ஞாபகமூட்டியுள்ளார்.
இஸ்ரேலிய புலனாய்வாளர்களும் பலதடவைகள் உமர் சுலைமானிடம் அவர் எகிப்தின் ஜனாதிபதியா வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்துள்ளனர்.
அவ்வாறே உமர் சுலைமானும் எகிப்திலிருந்து காஸா முஸ்லிம் போராளிகளுக்கு ஆயதங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இஸ்ரேல் எகிப்துமீது ஒரு படையெடுப்பை நடத்துமானால் அதனை தாம் வரவேற்பதாக இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில நிச்சயமாக ஒமர் சுலைமான் எகிப்தின் ஜனாதிபதியாக மூடிசூடுவதையே இஸ்ரேலும், அமொக்கவும் தமது கொள்கையாக கொண்டுள்ளன.
ஓருபுறம் எகிப்தில் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பும் மறுபுறம் அமொக்க இஸ்ரேலின் ஆதரவைப் பெற்றுள்ள ஒமர் சுலைமான் என்பவரும் எகிப்தை எவ்வழியில் கொண்டு செல்லப்போகின்றனர் என்பதே இன்று தொக்கிநிற்கும் பிரதான கேள்வியாகும்.
எகிப்திய நாட்டு மக்கள் ஹொஸ்னி முபாரக் என்ற சர்வதிகாரியை துரத்தியது நாட்டு நலனுக்காகவேயாகும். இந்நிலையல் தமது நலனுக்காக ஒமர் சுலைமான் என்ற பொம்மையை எகிப்தின் ஜனாதிபதியாக்க இஸ்ரேல் அமொக்கா மேற்கொள்ளும் எத்தகைய நடவடிக்கைகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமையாது.
எகிப்திய நாட்டு மக்கள் உண்மையான சுதந்திரத்தை இனிமேலாவது அனுபவிக்க வேண்டுமென அமொக்காவோ அல்லது மேற்குலகோ விரும்பினால் தயவுசெய்து அந்நாடுகள் எகிப்தின் உள்நாட்டு சுதந்திரத்தில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளட்டும். இல்லையேல் எகிப்துக்கும் அந்நாட்டு மக்களுக்கும் விடிவு என்பது கிட்டிய தூரத்தில் இல்லையெனலாம்..!
Post a Comment