Header Ads



இலங்கையர் தயாரானால் எகிப்து போன்று போராட்டம் நடத்தலாம் - ஜே.வி.பி


இலங்கை மக்கள் தயார் என்றால் எகிப்தில் நடைபெறுவதனைப் போன்று போராட்டம் நடத்துவதற்கு முடியும் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது.
 
எகிப்து மற்றும் டியூனிசீயா போன்ற நாடுகளின் போராட்டங்களுக்கு நிகரான போராட்டங்களை நடாத்த மக்கள் தயார் என்றால் அதற்கான தலைமைத்துவத்தை வழங்க ஜே.வி.பி தயார் என கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
ஜே.வி.பி கட்சியின் ஆறாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகம் மற்றும் சமவுரிமைகளை வென்றெடுப்பதற்கான முனைப்பு உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளதாகவும், அதற்கான ஆதரவினை வழங்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு அரசாங்கமோ ஐக்கிய தேசியக் கட்சியோ பொருத்தமற்றது என்பது தெளிவாக அம்பலமாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சீனா,இந்தியா, சைப்ரஸ், கியூபா மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகளின் சோசலிச கட்சிப் பிரதிநிதிகளும், ஜே.வி.பி.யினர் வெளிநாட்டு கிளைப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

No comments

Powered by Blogger.