Header Ads



செயற்கை ரத்தநாளங்கள் தயாரிப்பு

இருதய நோயாளிகளின் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் ரத்த நாளங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட நோயாளியின் உடலில் உள்ள “செல்”கள் மூலம் உருவாக்குகின்றனர்.

இதற்கு சுமார் 9 மாதங்களாகின்றன. இதுவரை நீண்ட நாட்களாக நோயாளிகளால் காத்திருக்க முடிவதில்லை. எனவே, தற்போது பரிசோதனை கூடங்களில் செயற்கையான முறையில் ரத்த நாளங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மற்றவர்களிடம் “செல்”களை தானமாக பெற்று அவற்றை இயற்கையாக பெறப்படும் புரோட்டீன்களுடன் சேர்த்து வளர்த்து உருவாக்கியுள்ளனர்.

இவற்றை ஒரு வருடத்துக்கும் மேலாக பத்திரமாக வைத்திருக்க முடியும். இந்த ரத்த நாளங்களை இருதய அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு பொருத்த முடியும். இது இருதய மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு பெரும் வரபிரசாதமாக கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.