சாக்லேட் சாபிட்டால்...!
உடலில் இருக்கும் நல்ல செல்கள் அழிந்துவிடாமல் காப்பாற்றி புற்றுநோய், இதய நோய்கள் வராமல் சாக்லேட் காப்பாற்றுகிறது. பழ ஜூஸ்களைவிட இந்த வேலையை சாக்லேட் சிறப்பாக செய்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், பாதிப்புகள் பற்றி அமெரிக்காவின் ஹெர்ஷே சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மையத்தில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு விதமான பழச் சாறுகள் குடிப்பது, சாக்லேட் தின்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன. மாதுளை ஜூஸ் உள்பட பல பழங்களின் ஜூஸ் குடிப்பதைவிட சாக்லேட் தின்பது நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவது தெரியவந்தது.
சாக்லேட், கோகோவில் அதிகம் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட், பாலிபீனால் ஆகியவை உடலில் இருக்கும் நல்ல செல்களை பாதுகாத்து புத்துயிர் கொடுக்கின்றன. இதனால் புற்றுநோய், மாரடைப்பு வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்தது.சாக்லேட் தின்பதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொலஸ்டிரால் அளவு உடலில் அதிகரிக்கிறது. எல்.டி.எல். எனப்படும் தீய கொலஸ்டிரால் அளவு குறைகி றது. இதனால் இதய நோய்கள் தவிர்க்கப்படுகிறது. வெள்ளை சாக்லேட்டை விட கருப்பு சாக்லேட்தான் இதயத்துக்கு நல்லது என்கின்றனர் ஆராய்ச்சியாளர் கள்
Post a Comment