ரிஸானா நபீகின் மேன்முறையீட்டை புதுபிக்க நடவடிக்கை
இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கினுடைய உயிரைப் பாதுகாக்க, மரண தண்டனையில் இருந்து விடுவிக்க ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவினால் சவுதி அரேபிய ரியாத் இராஜதந்திர காரியாலயத்திற்கு சமர்பிக்கப்பட்ட மேன்முறையீ்ட்டை புதுபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற ரிஸானா நபீக் தான் பணிபுரிந்த வீட்டு உரிமையாளருடைய குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனைப் பெற்றார்.
குறித்த குழந்தைக்கு ரிஸானா நபீக் பால் ஊட்ட முயன்ற பொது குழந்தை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரிஸானா நபீக்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யுமாறுக் கோரி சவுதி அரேபிய தூதரகத்தின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மேன்முறையீடு செய்திருந்தார்.
இந்த நிலையில் ரிஸானா நபீக்கின் உயிரைக் காப்பாற்ற தொடர்ந்தும் செயற்படுவோம் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
Post a Comment