யாழ்ப்பாணத்தில் மீண்டும் பதிவு நடவடிக்கையா..?
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினர் மக்கள் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வீடு வீடாகச் செல்லும் இராணுவத்தினர் குடும்பப் பங்கீட்டு அட்டையைப் பார்த்து பதிவதுடன், குடும்பத்தினரின் விபரங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இதன்போது குடும்ப உறுப்பினர்களை அடையாளப்படுத்தும் குடும்ப அடையாள அட்டைகளையும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர். வெளிநாட்டில் எத்தனை பேர் வசிக்கின்றனர் மற்றும் வாகனங்கள் உள்ளனவா என்பது தொடர்பான கேள்விகளை இராணுவத்தினர் மக்களிடம் கேட்டு பதிவுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்த காலப் பகுதியில் மக்கள் பதிவுகளை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

Post a Comment