ஐக்கிய தேசியக்கட்சிக்குள் உட்கட்சி மோதல் சூடுபிடிப்பு
ஐக்கிய தேசியக்கட்சியின் உட்கட்சிப் போர் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருப்பதாகவும் செயற்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை சஜித் பிரேமதாஸவும் அவர் பக்கமுள்ளவர்களும் மீறி வருவதாகவும் கட்சியின் மேல் மட்டத்தினர் பலரும் பெரும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சஜித் பிரேமதாச பல கூட்டங்களிலும் ஊடகங்களிலும் உட்கட்சி விவகாரம் பற்றிப் பேசிவருவதோடு கட்சித் தலைமைப்பதவி தமக்கு வழங்கப்படவேண்டுமெனவும் கூறிவருகிறார்.இதனால் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலை உருவாகியுள்ளது.இது கட்சியின் முன்னேற்றத்துக்கு பின்னடைவையே ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரப் பணிகளை முன்னெடுக்கும் விடயத்தில் சஜித் அணியினர் தனித்துச் செயற்பட்டு வருவதால் அது பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் எனவும் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்
.
Post a Comment