ஊடகங்கள் மீது அரசாங்கம் திட்டமிட்டே தாக்குதல் - தயாசிறி
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 30ம் திகதி அரசாங்கம் ஊடகங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நாள் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றியதாவது,
பிரகீத் என்னெலிகொட காணாமல் போய், லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு, சிரச தாக்கப்பட்டு, சியத்த தாக்கப்பட்டு, 15க்கும் மேலான ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியாகியுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் இவை ஒன்றுக்கும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சியத்த தாக்கப்பட்டது, லசந்த கொலை செய்யப்பட்டது, உபாலி தாக்கப்பட்டது அனைத்தும் தனிப்பட்ட பிரச்சினை என அரசாங்கம் சொல்கிறது.
சியத்த தாக்கப்பட்டது தனிப்பட்ட பிரச்சினை என எங்களுக்கும் தெரியும்.
ஊடகங்கள் தாக்கப்படுவது ஒவ்வொன்றையும் அரசாங்கம் வேறு விதத்தில் திசை திருப்பிவிடுகிறது. நாளை உங்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம். சரியாக எழுதினால் ஊடகவியலாளர்களைத் தாக்கிவிட்டு தனிப்பட்ட பிரச்சினை என்பர் என்றார்.
Post a Comment