Header Ads



இலங்கையில் வெள்ள இழப்புகளை ஈடுசெய்ய 600 மில்லியன் தேவை

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இரண்டு வெள்ளப்பெருக்குகளினாலும் ஏற்பட்ட சேதங்களுக்கு 600 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

கடந்த மாதமும் இந்த மாதத் தொடக்கத்திலும் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் மொத்தம் 64 பேர் கொல்லப்பட்டனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள பிரதான வீதிகளைத் திருத்தியமைக்கவும், சேதமடைந்த 50,000 வீடுகளைப் பழுது பார்க்கவும் அரசாங்கம் 33 பில்லியன் ரூபாவை (300 மில்லியன் டொலர்) ஒதுக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க நிதியைக் கொண்டு இந்த நிதிஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பல தசாப்தப் போரினால் இடம்பெயர்ந்து அண்மையில் மீளக் குடியமர்த்தப்பட்டவர்களே மீளவும் வௌளத்தினால் அதிகளவு இடம்பெயர்ந்தனர். வெள்ளத்தினால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அறுவடை இழப்பு 13 பில்லியன் ரூபாவாகும்.

இந்த இழப்பீட்டை முழுமையாக விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணங்கள் வழங்க 51 மில்லியின் ரூபாவை வழங்குமாறு அனைத்துலகத்திடம் ஐ.நா வேண்டுகோள் விடுத்திருந்தது. ஐ.நாவின் வேண்டுகோளில் சுமார் 20 வீதமானதை ஈடுசெய்யப் போதுமான நிதியுதவியே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.