நீளமான தலைமுடி வளர்த்த 60 மாணவருக்கு மொட்டை போட்ட ஆசிரியர்
60 மாணவர்களுக்கு மொட்டை அடித்து தண்டனை வழங்கிய ஆசிரியர் தலையை பாரதீய ஜனதா தொண்டர்கள் மொட்டை அடித்தனர்.
மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் நீளமான தலைமுடி வளர்த்து இருந்தனர். வகுப்பு ஆசிரியர் அவர்களை முடியை வெட்டச் சொல்லி கண்டித்தார்.
என்றாலும் மாணவர்கள் முடிவெட்டாமல் பள்ளிக்கு வந்தனர். இதையடுத்து ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் சேர்ந்து முடிவெட்டாமல் வந்த 60 மாணவர்களை வரச்சொல்லி அவர்களது தலையை மொட்டை அடித்தனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பாரதீய ஜனதா இளைஞர் அணியினர் போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த ஆசிரியரை பிடித்து அவரது தலையை மொட்டை அடித்தனர். பின்னர் தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.
Post a Comment