யாழ்ப்பாணத்தில் 4 பௌத்த பாடசாலைகள்
யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கென யாழ்ப்பாணத்தில் பௌத்த தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், நான்கு இடங்களில் பௌத்த தர்மப் பாடசாலைகளை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பௌத்த காங்கிரசின் தலைவர் ஜெகத் சுமதிபால தலைமையில் யாழ். நாகவிகாரையில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றிலேயே இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இவரது தலைமையில் நான்கு இடங்களில் பௌத்த பாடசாலைகளை நிறுவவும், புதிதாக பௌத்த வழிபாட்டு இடங்களை அமைக்கவும், இந்தச் சங்கத்தில் இணைவோருக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
புத்தூர், அச்சுவேலி, கைதடி, மானிப்பாய் ஆகிய இடங்களிலேயே பௌத்த தர்மப் பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு வசதியாக இந்தச் சங்கம் ஊடாக அரசாங்க வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்பும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைளுக்கு அரசாங்கம் நிதியுதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment