Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும், பண்பாடும் (தொடர் - 4)

அப்துல் ரஹீம்

முஸ்லிம்கள் ஈழத்தில் முதலில் எப்பகுதியில் குடியேறினார்கள் என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. முதற் குடியேற்றம் பேருவலை என்பர் பெரும்பாலார். இது சிறிது சிந்திக்கப்பட வேண்டியதாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டு அளவில் தமிழர் ஆதிக்கம் இலங்கையின் தென்பகுதி மேற்குப் பகுதிகளில் குறைவாகவே இருந்திருக்கிறது. வடபகுதியே காலத்துக்குக் காலம் நிகழ்நத தென்னிந்திய படையெடுப்புகளாலும், குடியேற்றங்களாலும் தமிழர் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது.இந்தநிலையில் இங்கு முதலில் முஸ்லிம்கள் குடியேறி அங்குள்ள மக்கள் மத்தியில் அடைந்த செல்வாக்கு காரணமாக ஏற்கனவே குடிகொண்டிருந்த இந்துக்களின் நல்லெண்ணத்திற்கு இலக்கானதன் காணத்தினால் உயர்குடியியற் பிறந்த நல்லொழுக்கமுடைய இந்துப் பெண்மணிகள் இஸ்லாத்தை ஒப்புக் கொண்டு இவர்களுக்கு துணைவியலாகும் வாய்ப்பைப் பெற்றனர்.

ஆறுமுக நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத்து சமயநிலை என்ற கட்டுரையிலே கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்களை மிகவும் கேவலமாக இடித்துரைக்கும் அதேவேளையில் முஸ்லிம்களைப் பற்றி எதுவுமே பேசாதிருப்பதானது, முஸ்லிம்கள் எந்த நிலையில் வைத்துக் கணிக்கப்பட்டிருந்தனர் என்ற நிலையினை தெளிவாக்கும். இப்படியாக தமிழப் பெண்களை அராபியர் மணந்ததாலேயே அவர்களின் தாய்மொழி தமிழாக இருக்கிறது. முதற் குடியேற்றம் சிங்கள மக்கள் மூ10ழவுள்ள பேருவலையில் கிகழ்ந்திருந்தால் முஸ்லிம்களின் தாய்மொழி சிங்களமாக ஆகியிருக்க வேண்டும். அத்துடன் சிங்களவரின் பண்பாட்டு அம்சங்களும் நிறைந்திருக்க வேண்டும். மாறாக முஸ்லிம்களின் பண்பாட்டு அம்சங்களில் தமிழர் பண்பாட்டின் செல்வாக்கு விரவியிருத்தலை நன்கு அவதானிக்க முடியும். போர்த்துக்கேயரும் பின்வந்த  ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்தில் இருந்த பள்ளிவாசல்கள் கட்டிடங்கள் யாவற்றையுமே சிதைத்து அந்தக் கற்களைக் கொண்டே பறங்கித் தெருப் பகுதியில் கட்டிடங்களை நிர்மாணித்தபடியால் எந்தவிதமான வரலாற்றுச் சான்றுகளும் பெறமுடியாது போய்விட்டது.

1344 இல் இப்னு பதூதா மாலைதீவு சென்று வருகையில் வானிலை சீராக அமையாததினால் கரையிறங்கி யாழ்ப்பாண அரசனாகிய ஆரியச் சக்கரவர்த்தியை காணச் செல்கிறார். அக்காலையில் அரபு நாடுகளுடன் ஆரியச் சக்கவைர்த்தி வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார். பல ஆய்வாளரும் கருதுவது போல இன்னுபதூதா இறங்கிய இடம் புத்தளமாக இருந்தால் அங்கிருந்து ஆரியச் சக்கரவர்த்தியிடம் வரவேண்டியதில்லை. சிங்கள மன்னர்களிடம் சென்றிருக்கலாம். எனவே அண்மைக்கால ஆய்வாளர்கள் கருதுவதுபோல பருத்தித்துறைப் பகுதியாக இருக்கவேண்டும். பாவா ஆதமலைக்குச் செல்லும் வழியிலுள்ள மேனார் மெந்தலி (மன்னார் - மாந்தை) பகுதியில் ஒரு முஸ்லிமாவது காணப்படவில்லை என்ற கூற்றிலிருந்து ஆரியச் சக்கரவர்த்தியின் ஆணைக்குட்பட்ட பகுதியில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பது புலனாகும்.

இலங்கை முஸ்லிம்களை முதன்முதல் அழழச என்று குறிப்பிட்டவர்கள் போர்த்துக்கேயரேயாவர். இதனால் மொறோக்கோ தேசத்தலிருந்து வந்து குடியேறியவர்கள் என்ற கருத்தினைக் கொள்வது நன்று என்றே நான் கருதுகிறேன். மொறோக்கோ  தேசத்தவர்கள் பொரும்பான்மையினர் ஹனபி மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் இலங்கை முஸ்லிம்களோ பெரும்பாலும் ஸாபி மத்ஹபை பின்பற்றுகிறவர்கள். புதிய இடம் ஒன்றுக்கு குடிபெயந்ததனால் தமது மத்ஹபை மாற்றியிருக்க மாட்டார்கள்.

தொடரும்...

No comments

Powered by Blogger.