Header Ads



வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் 6 மேன்முறையீடுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கென அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் நிராகரிக்கப்பட்டவைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களால் இதுவரை 41 மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இதில் 26 மேன்முறையீட்டு மனுக்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்தவினால் இந்த மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நான்கு மேன்முறையீடுகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 மேன்முறையீடுகளையும் தாக்கல் செய்துள்ளன.

அத்துடன் லங்கா சமசமாஜக் கட்சி, ஜனசெத பெரமுண மற்றும் மூன்று சுயாதீன குழுக்கள் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இந்த மேன்முறையீடுகள் அனைத்திலும் தமது வேட்பு மனுக்களை மீள ஏற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.