Header Ads



பாகிஸ்தானிடம் 110 அணுகுண்டுகள்

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சேகரிப்பது பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், யுரேனியம்,புளூட்டோனியம் கதிரியக்க தனிமங்கள் உற்பத்தியில் இந்தியாவை முந்தியுள்ளதாகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் 30-80 அணுஆயுதங்கள் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் அதன் எண்ணிக்கை இப்போது 110 ஆக உயர்ந்துவிட்டதாக தெரியவந்துள்ளது என்றும் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

இத்தகவலை அமெரிக்காவின் அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு மையத்தின் (இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் இண்டர்நேசனல் செக்யூரிட்டி) தலைவர் டேவிட் ஆல்பிரைட் கூறியதாகவும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் 1500 கிலோ மீட்டர் தூரம் சீறிச் சென்று தாக்கவல்ல ஷாஹீன்-2 என்ற ஏவுகணையை அந்நாடு தயாரித்தது. அணு ஆயுதத்தை சுமந்தவாறு வானத்திலிருந்தும், பூமியிலிருந்து ஒரே நேரத்தில் சீறிப்பாயும் க்ரூஸ் ஏவுகணைகளையும் பாகிஸ்தான் தயாரித்துள்ளதாக அமெரிக்க அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.