ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஒரு Call இல் அமெரிக்காவின் வரியை நீக்கியிருப்பார்
யூடியூப் சனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் முன்னாள் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளளார்.
பில்லியனர் தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் ட்ரம்ப் நிர்வாகத்தினால் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜித சேனாரத்ன அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், எலோன் மஸ்க் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்றும், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க பேச்சுவார்த்தை நடத்த இந்த வலுவான நட்பைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், ரணில் விக்ரமசிங்கே தற்போது ஜனாதிபதியாக இல்லாததால் இலங்கை அந்த வாய்ப்பை இழந்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்திருந்தால் 44% வரியைமுழுமையாக நீக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் 24% ஆகக் குறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment