Header Ads



மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியரை தேடும் பொலிஸார்


ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கொடூரமாகத் தாக்கியமை குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணையைத் தொடங்கியுள்ளது. 


கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள ஆண்கள் பாடசாலையொன்றின் வகுப்பாசிரியர் ஒருவர் தரம் 3 மாணவர்களை உலோக நடாவினால் அடித்து தண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சமீபத்தில் ஒரு முறைப்பாடு கிடைத்துள்ளது. 


அதன்படி, விசாரணைகளைத் தொடங்கியுள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, தண்டனைக்கு உள்ளான 7 வயது மாணவர்கள் இருவரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் பெற்றோரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. 


சந்தேகத்திற்குரிய ஆசிரியர் பதுளை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


ஆசிரியரைக் கைது செய்ய விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.