அநீதி என்பது, அணையா நெருப்பு
கலீபா மாஃமூன் ரஷீத் சிறுவனாக இருந்தபோது அவரின் ஆசிரியர் காரணமின்றி தடியால் அவரை அடித்தார்
"என்னை என்ன காரணத்திற்காக அடித்தீர் என் பல முறை கேட்டும் அந்த ஆசிரியர் பதிலளிக்காமல் பேசாமல் இரு" என் வாயை அடைத்துவிட்டார்
இருபதாண்டுகளுக்குப் பின் மஃமூன் ரஷீத் கலீபாவாக பதவி ஏற்ற உடன் அந்த ஆசிரியரை அழைத்து என்னை அன்று ஏன் அடித்தீர்? எனக்கேட்டார்.
ஆசிரியர் சிரித்துக் கொண்டே அந்நிகழ்ச்சியை இவ்வளவு ஆண்டுகளாக ஆகியும் மறக்கவில்லை யா? எனக் கேட்க கலீபா சொன்னார்:
காரணமின்றி நான் வாங்கிய அந்த அடியின் வேதனையை என்னால் இன்றுவரை மறக்கமுடியவில்லை"
ஆசிரியர் சொன்னார்:
மகனே! அநீதி என்பது நெருப்பைப் போன்றது அநீதி இழைக்கப்பட்ட வனின் உள்ளத்தில் அது எரிந்து கொண்டிருக்கும் எவ்வளவு காலம் கடந்தாலும் அது அணையாது என்பதை வருங்கால ஆட்சியாளரான நீ உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே அடித்தேன்"
- அரபு இணையத்திலிருந்து -
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி
Post a Comment