Header Ads



NPP யை பொய்யர்களின் அரசாங்கம் என அழைப்பது ஏன்..?


ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். தற்போது இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள். பொய்யுரைக்க வேண்டாம். இதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் என்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று(09) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''மின்கட்டணம் குறைப்பு ஊடாக நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள்.


தேர்தல் காலத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய காலத்தில் மின்கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைப்பதாக வாக்குறுதியளித்தார்.


5000 ரூபா கட்டணத்தை 3000 ரூபாவாகவும், 9000 ரூபாவை 6000 ரூபாவாகவும் குறைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் தற்போது கட்டணம் குறைக்கப்படவில்லை.


மின்சார சபை 167 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது. எவருக்கும் கடன் இல்லை ஆகவே மின்சார சபை கடன் என்று பொய்யுரைக்க வேண்டாம்.

No comments

Powered by Blogger.